dhanush

Advertisment

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், வேறு சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2eb4f8a4-ff49-4ca8-af81-c5f946f8f3c9" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_29.png" />

இந்த நிலையில், அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் இன்று (05.03.2021) திரையரங்கில் வெளியாகியுள்ளது. பட வெளியீட்டை முன்னிட்டு செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகர் தனுஷ் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அப்பதிவில், "'நெஞ்சம் மறப்பதில்லை' படம் திரையரங்கில் இன்று வெளியாகிறது. பிளாக் பஸ்டர் வெற்றிபெற செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.